Monday, April 4, 2011

தமிழக முஸ்லீம் அரசியல் சூழலும் ஆபத்தான இஸ்லாமியவாதிகளின் போக்கும்


              பொதுவாக முஸ்லீம் சமூகத்தில் பல்வேறு வகையான குழுக்கள் இருந்தாலும் நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்பு செய்ததை போல் 73 க்கும் மேற்பட்ட குழுக்கள் இருந்தாலும் பொதுவாக அவற்றை மூன்று பிரிவாக பிரிக்கலாம். ஒன்று எக்குழுவிலும் இருக்க மாட்டார்கள் அல்லது அவர்கள் இருக்கின்ற குழுவுக்கும் இஸ்லாத்திற்கும் பெயரளவிற்கும் சம்பந்தமிருக்காது. ஒரு சாதாரண முஸ்லீமிடத்தில் காணப்படும் தொழுகை, நோன்பு போன்றவற்றில் கூட பலவீனமாக இருப்பார்கள். அவர்களின் குழுக்களோ வெறும் உலக விஷயங்களில் ஈடுபட கூடியவர்களாக, தங்கள் பொருளாதார அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்.

               இன்னொரு வகையினர் எப்படிப்பட்டவர்கள் என்றால் இஸ்லாத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் போன்று தோற்றமளிப்பார்கள். தாடியின் அளவு குறைந்தது இவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் அதீத முனைப்பு காட்டுவார்கள், நபி ஸல் அவர்கள் இவ்வாறு தான் தொழுதார்கள் என்று கூறுவதோடு நில்லாமல் தங்களுக்கு மாற்றமாக கையை அசைத்தால் அல்லது அசைக்காமல் இருந்தால் அவர்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் அளவு வணக்க வழிபாடுகளில் தீவிரமானவர்கள். இவர்களில் வேறு சிலர் இம்மாதிரி தர்க்க ரீதியாக சிந்திப்பவர்கள் அல்ல என்றாலும் தொழுகையோடு திருப்தி பட்டு கொள்பவர்களாக இருப்பவர்கள்.

                 ஆனால் இஸ்லாத்தை முழுமையாய் இம்மண்ணில் நிலைநாட்டுவதில் ஆர்வமிருக்காது மாத்திரமல்ல, இஸ்லாமிய அரசியல் என்றால் தொற்று நோயை பார்த்து விரண்டோடுபவனை போல் ஓட கூடியவர்களாய், இஸ்லாமிய ஆட்சியாய் என்றாலே அலர்ஜியாய் பக்கம் பக்கமாய் விமர்சனம் செய்ய கூடியவர்களாய் உள்ளனர். தொழுகையில் ஜமாத்தின் ஒற்றுமைக்காக சிறிய விஷயங்களை விட்டு கொடுக்காதவர்கள், மாலை போட்டு திருமணம் செய்தாலே இஸ்லாமிய திருமணம் அல்ல என்றும் பத்திரிகை அடித்தாலே பித் அத் என்று கூக்குரலிடுபவர்கள் வரதட்சணைக்கு எதிராக முழக்கமிடுபவர்கள், இஸ்லாமிய ஆட்சி என்றால் மாத்திரம் “அல்லாஹ் யாதோர் ஆத்மாவையும் சக்திக்கு மேல் சோதிப்பதில்லை” (திருக்குரான்  2:286 ) எனும் திருமறை வசனத்தை சொல்லி அவ்வுணர்வை மங்க செய்வதை பார்க்கின்றோம்.

                மூன்றாவது குழு யாரெனில் திருமறை குரானில் சொல்கின்ற மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர் (திருக்குரான் 3:104). படி இருக்கும் இஸ்லாமியவாதிகளே முஸ்லீம் உம்மத்தில் இருக்கும் உன்னதமான குழு. இவர்கள் இஸ்லாத்தை கூறு போட்டு பிரிக்காமல், நுனிப்புல் மேயாமல் இஸ்லாத்தை ஆழமாய் விவாதிப்பதோடு நின்று விடாமல் இஸ்லாத்தை தனிப்பட்ட வாழ்வில் கடைபிடிப்பதோடு அதை பிற மக்களுக்கும் சொல்ல கூடியவர்களாய் இருப்பார்கள். மேலும் இஸ்லாத்தை மண்ணில் நிலைநாட்ட போராட கூடியவர்களாய் அல்லாஹ் திருமறை குரானில் சொல்கின்ற படி அழகான வியாபாரம் செய்ய கூடியவர்களாய் இருக்கின்றனர்.

                    ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?  (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (திருக்குரான் 61 : 10,11) என்று சொல்கின்ற படி தீனை மேலோங்க செய்ய, மார்க்கத்தை நிலைநாட்ட போராடுகின்றவர்களாய் இருக்கின்றன. இஸ்லாம் வலியுறுத்தும் இம்மூன்றாம் குழுவில் தற்போது நான்காம் படையாக உருவாகியுள்ளது so called இஸ்லாமியவாதிகள் எனப்படுவோர் ஆவார்கள். ஆம் இஸ்லாமியவாதிகளிலேயே ஒரு புதிய குழுவாய் இந்நவீன இஸ்லாமியவாதிகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தாய் உள்ளனர் என்றால் அது மிகையானதல்ல. 

              இதை விரிவாய் விளங்க தமிழக அரசியலையே எடுத்து பாருங்கள். முஸ்லீம் லீக் தேர்தலில் போட்டியிடுவதை யாரும் ஆபத்தாய் பார்ப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் இயல்பிலியே தங்களை ஓர் அரசியல் கட்சியாக அடையாளம் காட்டி கொண்டவர்கள். வன்னியர்களுக்கு ஓர் வன்னியர் சங்கம், பா.ம.க போல் அல்லது தலித்களுக்கு ஓர் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் போல் கவுண்டர்களுக்கு ஓர் கொ.மு.க போல் முஸ்லீம்களுக்கான ஓர் கட்சி எனும் அடிப்படையில் அவர்களின் நிலைப்பாடில் குறை காண வாய்ப்பில்லை. ஆனால் குரான், ஹதீஸ் படி தான் நடப்போம் என்று சமூக மறுமலர்ச்சிக்காக ஏகத்துவத்தின் அடிப்படையில் (இது முழுமையான ஏகத்துவம் அல்ல, so called ஏகத்துவம் என்பது வேறு விஷயம்) சமூகத்துக்காக ஆரம்பிக்கட்ட இயக்கங்கள் ஜனநாயக அரசியலில் குதிக்க ஆரம்பித்த போது முஸ்லீம் லீக்கை போல் நேரடியாக குதிக்காமல் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றும் மக்களுக்கு போராட மட்டுமே அரசியலில் குதிப்பதாகவும் கூறினார்கள்.

          பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட கழகங்களும், ஜமாத்துகளும், ஜனநாயகம் ஹராம், ஜிஹாத் ஒன்றே தீர்வு என இளைஞர்களுக்கு வெளிச்சத்தை காட்டியவர்களும் வெவ்வேறு பெயர்களில் உருமாறி நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தின் காவலர்களாய் பரிணாமம் எடுத்தும் அரசியலில் ஈடுபடுவதை பார்க்கின்றோம். ஏன் இவர்களின் அரசியல் ஆபத்தானது என்றால் இவர்களின் அரசியல் முஸ்லீம் லீக்கை போல் அல்லாமல் இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட அரசியலாக சிலரால் இஸ்லாமிய அரசியலாகவே பார்க்கப்படும் ஆபத்து உள்ளதை பார்க்கின்றோம்.

           ஜனநாயக அரசியலில் நுழைந்த பிறகு எந்தளவு மாறி போய் விட்டனர் என்றால் ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு என்றவர்கள் ஜனநாயகத்தின் காவலர்களாய், நரபலி மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மோடியின் தோழிக்கு வக்காலத்து வாங்குபவர்களாய் மாறிய கொடுமையை பார்க்கின்றோம். அது போல் அரசியல் சாக்கடை என்பதால் நாங்கள் போட்டியிட மாட்டோம் ஆனால் முஸ்லீம் வேட்பாளர்களுக்கு எதிராக உடன்பிறப்புகளுக்கு வேட்டையாடும் ஜமாத்துகளும் ஒரு காலத்தில் ஓட்டு போடுவதை ஹராம் என்று சொன்னவர்கள் தாம் என்பதை மறந்து விட கூடாது.

            இவற்றிக்கெல்லாம் மாற்றாய் கிலாபத் சிந்தனையை தமிழ் கூறும் நல்லுலகில் பிரபலமாக்கியவர்கள், பிக்ஹு பிரச்னைகளுக்குள் மாட்டி கொள்ளாமல் உலகளாவிய அளவில் இஸ்லாத்துக்காக போராடிய இயக்கங்களையும் வீரர்களையும் அடையாளம் காட்டியவர்கள், இன்று அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்பதற்கு பதிலாக அதிகாரம் மக்களுக்கே என முழங்க கூடிய நிலையை பார்க்கின்றோம். பயத்திலிருந்தும் பசியிலிருந்தும் விடுதலை என்று சொல்லி கொள்ளும் இவர்கள் தாங்கள் வெளியிடும் மைல்கற்கள் போன்ற புத்தகங்களை படிக்கின்றார்களா என்பதும் தெரியவில்லை. இதே நிலை சென்றால் இஸ்லாத்திலிருந்தும் விடுதலை என்று போய்விடும் அபாயம் இருப்பதையும் மறுப்பதிற்கில்லை (அல்லாஹ் பாதுகாப்பானாக).

                  இவர்களால் இஸ்லாத்துக்கு முரணான ஜாஹிலிய்யாவிலிருந்தும் முழுமையாய் விடுபடவில்லை. அதே சமயத்தில் தாங்கள் சுவாசித்த இஸ்லாமிய இயக்கங்களில் தாக்கத்தினால் இஸ்லாத்தையும் மறக்க முடியாமல் தவிப்பதை பார்க்கின்றோம். இப்படிப்பட்ட நான்காம் படை இஸ்லாமியவாதிகளின் வளர்ச்சி என்பது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தானதாகவே முடியும். இவர்கள் அந்தந்த சமயத்திற்கு தகுந்த மாதிரி பேச கூடியவர்களாக இருப்பது ஆபத்தானது. வெறும் அரசியல் மட்டும் பேசினால் பரவாயில்லை. அவ்வப்போது இஸ்லாத்தையும் பேசுவது தான் பிரச்னை. ஏனென்றால் இவர்கள் பேசுவது, செய்வது அனைத்தும் இஸ்லாமாக கணிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

          அதனால் தான் இவர்களால் சாதாரண சமயங்களில் அன்வர் அல் அவ்லாக்கியை சிலாகித்தும் தேர்தல் சமயங்களில் அதிமுகவை ஆதரித்தும் பேச கூடியவர்களாய் உள்ளனர். செசன்யாவின் போரட்டத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் உள்ளூரில் திமுகவை ஆதரிக்க கூடியவர்களாகவும் உள்ளனர். இன்னும் சிலர் திமுக, அதிமுகவை ஆதரிப்பது தான் ஹராம், ஆனால் முஸ்லீம்களை ஆதரிப்பது ஹலால் எனும் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளனர். இது இஸ்லாத்தின் அரசியல் கொள்கையை பற்றிய அறியாமையை காட்டுகிறது. அதனால் தான் பேரறிஞர்கள், நவீன இமாம்கள் என கருதப்படுவோர் கூட இஸ்லாத்தின் அரசியல் கொள்கை எவ்வடிப்படையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பதை குறித்து தான் கரிசனை காட்டுகிறதே தவிர யார் பொறுப்பில் இருக்கிறார், தேர்ந்தெடுக்கப்படும் முறை குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை என்பதை உணர மறந்து விடுகின்றனர்.

           ஆனால் இந்நான்காம் படையினர் உலகில் வெற்றி பெற வேண்டுமென்றால் குறைந்தது அரசியலையாவது ஒழுங்காக செய்ய வேண்டும். அதற்கு இஸ்லாத்தை பேசாமல் அரசியலை மட்டும் செய்யலாம். இல்லை எங்களுக்கு கொள்கை தான் முக்கியம், மார்க்கத்தை நிலைநாட்டுவது தான் எங்கள் நோக்கம் என்று நினைத்தார்கள் என்றால் அவர்கள் இரண்டாங்கெட்டான் நிலையை தவிர்த்து விட்டு இஸ்லாத்தை இஸ்லாமின் மூலமே நிலைநாட்ட முடியும் என்பதை உணர்ந்து உண்மையான இஸ்லாமியவாதிகளாய் மாறுவதன் மூலம் ஈருலகிலும் நன்மை பெற்று கொள்ள முடியும். அத்தகைய கொள்கை குன்றுகளாய் மாற அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்வானாக.

10 comments:

Anonymous said...

என்ன அபத்தம் இது கட்டுரையாளர் என்ன கூறவருகிறார்? அவருக்கு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின்மேல்உள்ள வெருப்பை உமிழ்கிறாறேஒழிய இக்கட்டுரையில் மற்றொன்றையும் காணமுடிவதில்லை!

FEROZE AHAMED said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷாஅல்லாஹ் மிக அருமையான கட்டுரை, மிகச்சரியான கருத்து.
இக்கட்டுரைக்கு ஒரு பெயர் இல்லாத மனிதர் கருத்து தெரிவித்திருந்தார். அவர் இன்னும் அறியாமை என்னும் இருளில் உள்ளார் பாவம். இவ்வுலகில் அன்று முதல் இன்று வரை சத்தியத்தை யார் கூறினாலும், அசத்தியவாதிகாளின் கருத்து இப்படித்தான் இருக்கும்.
எனவே இது போன்று கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உங்களின் இப்பணி மென்மேலும் சிறக்க துவா செய்க்கின்றோம். இன்ஷாஅல்லாஹ்.

shaheed said...

4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

shaheed said...

2:247. அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.

shaheed said...

//82:19. அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.//
//6:57. பின்னும் நீர் கூறும்: “நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.//

shaheed said...

அல்லாஹ் தம்முடைய வசனங்களை தெழிவாகவே விவரிக்கின்றான், எனவே நீங்களும் குழம்பிமற்றவறையும் குழப்ப முயற்ச்சிக்க வேண்டாம்....

இந்த கட்டுரையில் உள்ள பல அபத்தங்கள் குறித்தும் நாம் விரிவாக விவாதிக்கலாம் ஆனால் அதற்க்கான நேரம் என்னிடமும் உங்களிடமும் இருக்காது என்று நினைக்கிறேன்......
எனவே இஸ்லாத்தை விட்டுவிட்டு முழுமையாக அரசியல்வாதி ஆகிவிடுங்கள் நாங்கள்தான் இஸ்லாத்தை காப்பாற்றப் பிறந்தோம் நீங்கள் எல்லாம் அதற்க்கு லாயக்கில்லை என்று மிரட்டாமல், கிலாஃபத்தை நோக்கிய உங்களுடைய பாதையிலவது முழுமையாக நேரத்தை செலவிடுங்கள்....
யாருக்காக கிலாஃபத் வேண்டும் என்கிரீற்களோ அந்த முஸ்லிம்களிடத்தில் இறங்கி வாருங்கள், கிலாஃபத் பற்றி நமக்குள்ளாகவே பேசிக்கொள்வதால் எந்த பயனும் இல்லை, சலபுக்களைப் போல் முழுமையாக விவாத மோகத்தில் சிக்கி விட வேண்டாம் என்பது இந்த சகொதரனுடைய தாழ்மையான அறிவுரை.....
அல்லாஹ்(சுபு) உங்களுடைய எல்லா முயற்ச்சிகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என பிராற்திக்கிறேன்....
அஸ்ஸலாமு அலைக்கும்.....


22:78. இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.

Iraivanin Adimai said...

அன்பு சகோதரர் ஷஹீத் தங்களின் நீண்ட பின்னூட்டம் படித்தேன். தயை கூர்ந்து இக்கட்டுரையில் தாங்கள் கண்ட பிழையை சுட்டி காட்டினால் விளக்க ஏதுவாய் இருக்கும். நேரிடையாக ஓரே பதிவில் சுட்டி காட்டவும் ப்ளீஸ் -

shaheed said...

//அதற்கு இஸ்லாத்தை பேசாமல் அரசியலை மட்டும் செய்யலாம்.// - இதை கூற உங்களுக்கு யார் அதிகாரம் அழித்தது.....
இவர்கள் ஏன் இஸ்லாத்தை பேசக்கூடாது குரானின் வார்த்தைகள் கொண்டு விலக்கவும்....
தேவைப்பட்டால் மற்ற கேல்விகள் கேட்கின்றேன்.....
ஹஸ்புனல்லாஹ்....

Moosa said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
மேற்கண்ட கட்டுரையில் கட்டுரையாளர் தவ்ஹீத்வாதிகளை குறை சொல்லியிருப்பது கண்டிக்கத்தக்கது. இஸ்லாம் எப்போதும் இஸ்லாமிய அடிப்படையிலான ஒற்றுமையைத்தான் விரும்புகிறதே தவிர இஸ்லாத்தை அடகு வைக்கும் ஒற்றுமையை விரும்பவில்லை. இஸ்லாம் அல்லாஹ்விற்கும் , அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட சொல்கிறது. அல்லாஹ்விற்கும் , அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு செயல்படும்போது செயல்படுபவர்கள் , செயல்படாதவர்கள் என்ற இரண்டு பிரிவு உண்டாகத்தான் செய்யும். ஊர் ஒற்றுமைக்காக என்றுமே மார்கத்தை வளைக்கும்படி இஸ்லாம் ஒருபோதும் சொல்லவில்லை. அம்மணமாக திரியும் ஊரில் ஆடை அணிந்து கொண்டு மற்றவர்களையும் அணிய சொன்னால் கட்டுரையாளரின் கருத்துப்படி கட்டுரையாளர் என்ன சொல்ல வருகின்றார் என்றால் நீங்க மட்டும் என்னப்பா ஆடை அணிகிறீர்கள் ஊரோட ஒத்துப்போங்க என்று நிர்வானர்களுக்கு ஒத்து ஊதும் பணியை செய்கிறார். இறுதியாக இஸ்லாத்திற்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம். ஆனால் எதற்காகவும் இஸ்லாத்தை விட்டுக்கொடுக்காக்கூடாது நாங்களும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறி முடிக்கிறேன்.

Moosa said...

salam.

/நபி ஸல் அவர்கள் இவ்வாறு தான் தொழுதார்கள் என்று கூறுவதோடு/

இப்படி சொல்லாமல் எப்படி சொல்லவேண்டுமென்று கட்டுரையாளர் எதிர்பார்க்கிறார் என தெரியவில்லை. ஒரு வேலை ஹனபி , ஷாபி , ஹன்பலி , மாலிகி ஆகியோர் இவ்வாறு தொழுதார்கள் என கூறவேண்டும் என எதிர்பார்கிறாரா? அதைத்தான் ஏற்கெனவே ஒரு வழிகெட்ட கூட்டம் செய்துகொண்டிருக்கிறதே.